Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரீ-ரிலீஸ் செய்யப்படும் 96 திரைப்படம்!
[Tuesday 2026-10-06 16:00]

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த 96 திரைப்படம் 8 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகிறது. இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 96. காதல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பள்ளி பருவ காதல், அதன்பின் ஏற்படும் பிரிவு, பல ஆண்டுகள் கழித்து சந்தித்துக்கொள்ளும் காதலர்கள், அவர்களுடைய ஒருநாள் இரவு பயணம், அதன்பின் மீண்டும் ஏற்படும் பிரிவு, ராமை விட்டு என்றும் பிரியாத ஜானுவின் அழகிய நினைவுகள் என 96 படம் நம் மனதை தொடர்ந்து வருடிக்கொண்டே இருந்தது.

திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் சமீபகாலமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 96 திரைப்படம் எப்போது ரீ-ரிலீஸ் ஆகும் என பலராலும் கேட்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி 96 திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது என தகவல் வெளியாகியுள்ளது. யாரெல்லாம் இப்படத்தை மீண்டும் திரையரங்கில் பார்க்க எதிர்பார்த்து காத்திருந்தார்களோ, அவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை தந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா