Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் கொடுத்த சூர்யாவின் 'சீன்'!
[Monday 2026-10-05 16:00]

சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தின் ஓடிடி விற்பனையின் மூலம் பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என தொடர் வெற்றியை தந்து வரும் சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் சீன். இப்படத்தை மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்க, நஸ்ரியா, நஸ்லன், ஆனந்த்ராஜ், லால், ராஜ் ப்ரியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு சீன் திரைப்படம் வெளியாகிறது.

ஒவ்வொரு பெரிய திரைப்படம் வெளிவரும்போது, அப்படத்தின் பிசினஸ் குறித்த தகவல் வெளிவரும். ஓடிடி, சாட்டிலைட், திரையரங்க உரிமை உள்ளிட்ட விஷயங்கள் எவ்வளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை திரை வட்டாரத்தில் பேசுவார்கள்.

இந்த நிலையில், சீன் திரைப்படத்தின் ஓடிடி பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 88 கோடிக்கு வாங்கியுள்ளது என கூறப்படுகிறது. சீன் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ. 30 கோடியாம். இதில் சூர்யாவின் சம்பளம் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியிருக்க, இப்படத்தின் பட்ஜெட் ரூ. 30 கோடி என்றால், ஓடிடி பிசினஸ் மூலமாகவே மூன்று மடங்கு லாபம் கிடைத்துள்ளது. இது சீன் திரைப்படம் ரிலீஸுக்கு மும்பே செய்துள்ள மாபெரும் சாதனை ஆகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா