Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய் மகனுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா!
[Friday 2026-10-02 08:00]

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்த சமயத்தில் முழு நேர அரசியலில் குதித்தார். தேர்தலில் ஜெயித்து தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் இயக்கி இருக்கும் சிக்மா படம் நாளை திரைக்கு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா சஞ்சய்க்கு வாழ்த்து சொல்லி X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

"உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்.. சஞ்சய் இப்போது ஒரு இயக்குனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நாளை மிகப்பெரிய நாள். வாழ்த்துக்கள். பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள்" என சூர்யா பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு பதில் கொடுத்த ஜேசன் சஞ்சய், "ஊக்கமளிக்கும் வார்த்தைகளை சொன்னதற்காக நன்றி சார். இது எனக்கு இன்னும் பலம் மற்றும் உத்வேகத்தை இது அளிக்கிறது.

ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்க வைக்கிறது. லவ் யூ சார்" என ஜேசன் சஞ்சய் பதிவிட்டு இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா