Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஓடிடியில் சாதனை படைத்த விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் ஜனநாயகன்!
[Wednesday 2026-09-30 16:00]

2026-ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் ஜனநாயகன் மற்றும் விஸ்வநாத் & சன்ஸ். பல தடைகளை தாண்டி கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த ஜனநாயகன் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சற்று தடுமாறியது. அதேபோல் சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் தோல்வியை தழுவினாலும், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசூல் அள்ளி சாதனை படைத்தது.

திரையரங்குகளில் ஓடி முடித்து, விஸ்வநாத் & சன்ஸ் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியிலும், ஜனநாயகன் ஜீ5 ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இதனால், ஓடிடியில் ஜனநாயகன் மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படங்கள் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளன.

இந்த வருடம் தமிழ் சினிமாவில் இதுவரை ஓடிடியில் வெளிவந்த திரைப்படங்களிலேயே 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் இரண்டு திரைப்படங்கள் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா