Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-09-28 08:00]

மீசைய முறுக்கு 2 திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் 3 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம். ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதன்பின் தனி ஒருவன், இன்று நேற்று நாளை, அரண்மனை 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னர், 2017-ஆம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் களமிறங்கினார். தனது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை அவர் இயக்கியிருந்தார்.

இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், 9 வருடங்களுக்கு பின் மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால், இம்முறை கானா பாடல்களையும், கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், சைத்ரா, கெத்திகா, நாசர், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதியிடம் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான மீசைய முறுக்கு 2 திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், முதல் நாளிலிருந்தே வசூலை அள்ளி வருகிறது. இந்த நிலையில், 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா