Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தயாரிப்பாளராக பல கோடிகளை அள்ளிய பகத் பாசில்!
[Thursday 2026-09-24 16:00]

பகத் பாசில் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வசூல் செய்த மூன்று திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பகத் பாசில் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், மாரீசன், இதயம் முரளி என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் Don't Trouble The Trouble திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பகத் பாசில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இவர் தயாரிப்பில் வெளிவந்த பிரேமலு ரூ. 130 கோடி, ஆவேசம் ரூ. 155 கோடி மற்றும் பெத்தலகேம் குடும்ப யூனிட் ரூ. 310 கோடி என பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. இதன் மூலம் பகத் பாசில் பல கோடிகள் கல்லா கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா