Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இர்பான் கார் மோதி உயிரிழந்த சம்பவம்: ரூ. 30 லட்சம் அபராதம்!
[Monday 2026-09-21 07:00]

கடந்த 2023-ஆம் ஆண்டு யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Food Vlog மூலம் யூடியூப்பில் பிரபலமானவர் முகமது இர்ஃபான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். மேலும், நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் தனது பணியை முடித்து வீட்டிற்கு செல்ல மரமலை நகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது பென்ஸ் கார் வேகமாக வந்து பத்மாவதியை மோதியது. இந்த விபத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய அசாருதீன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை காவல் நிலையம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது யூடியூபர் இர்ஃபானின் கார் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், தற்போது யூடியூபர் இர்ஃபான் விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் குடும்பத்தினருக்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா