Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள சர்தார் 2!
[Friday 2026-09-18 16:00]

இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் கார்த்தி கூட்டணியில் உருவாகி வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சர்தார். இப்படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 பிரம்மாண்ட பொருட்செலவில் உருவானது.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நிழல்கள் ரவி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில், அதனை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன; இதனால் பாக்ஸ் ஆபிஸில் சர்தார் 2 கடும் சரிவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், 8 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 24 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இப்படம் ரூ. 30 கோடி வசூல் செய்வதே மிகப்பெரிய விஷயம் என கூறப்படுகிறது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது சர்தார் 2.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா