Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
[Tuesday 2026-08-25 17:00]

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சூர்யாவிற்கு கருப்பு திரைப்படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கிடைத்தது. மேலும் ரூ. 340 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்து, சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையும் படைத்தது.

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். அப்படிப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை தமிழ்நாட்டில் எதிர்கொண்டது. அப்படி இருந்தும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், உலகளவில் 187 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 11 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா