Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அட்வான்ஸ் புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் டாக்சிக்!
[Tuesday 2026-08-25 17:00]

யாஷ் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் டாக்சிக் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் யாஷுடன் இணைந்து கியாரா அத்வானி, தாரா சுதாரியா, நயன்தாரா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். கே.ஜி.எப் படத்திற்கு இசையமைத்த ரவி பாசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ப்ரோமோஷன் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் யாஷ் தனது படம் குறித்தும், முதலமைச்சர் விஜய் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளியாகும்போதும் அந்த படத்தின் அட்வான்ஸ் புக்கிங் எவ்வளவு என்று பார்ப்பது வழக்கம் தான். அதை வைத்து இப்படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது தெரிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள டாக்சிக் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், இப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே ரூ. 45 கோடி வரை வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக முதல் நாள் வசூல் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என் தெளிவாக தெரிகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா