Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வசூலில் லாப கணக்கை தொடங்கிய விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம்!
[Thursday 2026-08-20 18:00]

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் லாப கணக்கை தொடங்கிவிட்டது. கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடிக்க, நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் பிரேக் ஈவன் செய்து லாப கணக்கை தொடங்கிவிட்டது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பிரேக் ஈவன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா