Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்!
[Tuesday 2026-08-18 16:00]

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் களமிறங்கி ஆட்சியை பிடித்து இன்று முதலமைச்சராக 100 நாட்களை கடந்துள்ள விஜய் அவர்களின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

இதற்கிடையில் தேர்தல் நடைபெற்று அதில் விஜய் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பின் பல தடைகளை தாண்டி ஜனநாயகன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. அதுவும் தளபதி விஜய் என்று இல்லாமல், முதலமைச்சர் விஜய் என்கிற டைட்டில் கார்டுடன் வெளிவந்து திரையரங்கை தெறிக்கவிட்டது.

ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடினார்கள். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், ரேச்சல் ரெபேக்கா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம் 23-ஆம் தேதி வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், கலவையான விமர்சனங்களும் வந்தன. மேலும் சில இடங்களில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகன் முன்பதிவில் இருந்து இதுவரை ஒவ்வொரு நாளும் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். உலகளவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்தது, வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பற்றிய விவரங்களையும் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில், விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இறுதியாக ரூ. 323.5 கோடி வசூல் செய்துள்ளது. இது விஜய்யின் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான இறுதி வசூல் என்றாலும், திருட்டுத்தனமாக லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படத்திற்கு உலகளவில் ரூ. 323.5 கோடி இறுதி வசூல் என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா