Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நயன்தாரா அணிந்திருக்கும் புடவை முதல் மோதிரம் வரை, அவற்றின் விலை எவ்வளவு தெரியுமா?
[Thursday 2026-08-13 16:00]

டாக்சிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா அணிந்து வந்திருந்த புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார். அடுத்ததாக சல்மான் கானுக்கு ஜோடியாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி மூக்குத்தி அம்மன் 2, Hi என அடுத்தடுத்த பல திரைப்படங்கள் நயன்தாராவின் நடிப்பில் வெளிவரவுள்ளன. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் டாக்சிக் வெளியாகிறது.

டாக்சிக் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பட ப்ரோமோஷனில் பெரிதும் கலந்துகொள்ளாத நயன்தாரா, இதில் கலந்துகொண்டார். மேலும், தான் ஏன் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்வதில்லை, டாக்சிக் ப்ரோமோஷனில் மட்டும் ஏன் கலந்துகொண்டேன் என்பது குறித்தும் விவரமாக கூறினார்.

புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை டாக்சிக் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா அணிந்திருந்த ஆரஞ்சு நிற புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அவர் அணிந்திருந்த புடவையின் விலை ரூ. 22,900 என்றும், பிரேஸ்லெட்டின் விலை ரூ. 23 லட்சம் என்றும், மோதிரத்தின் விலை ரூ. 6.25 லட்சம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா