Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Thursday 2026-08-13 09:00]

விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 21 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்தது. அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், கலவையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும், ஒருசில இடங்களில் வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது.

இந்நிலையில், 21 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 21 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 316 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா