Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வசூல்!
[Tuesday 2026-08-11 16:00]

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ முதல் முறையாக நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பையும் இரட்டிப்பாக்கியுள்ளது.

வருகிற 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கிவிட்டது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம், அந்த படம் முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள்.

இந்நிலையில், தற்போது வரை நடைபெற்றுள்ள முன்பதிவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ரூ. 90 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன் மொத்தமாக முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா