Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏஆர் அமீனின் கார் விபத்தில் சிக்கியது!
[Monday 2026-08-10 07:00]

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீனின் கார் விபத்தில் சிக்கியது. ஏ.ஆர்.அமீன், அவரது நண்பருடன் கோயம்பேட்டில் இருந்து வந்த கார், எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அனைவரும் தப்பினர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன். குழந்தையிலேயே தன் தந்தையின் இசையில் பாடகராக அறிமுகமான ஏ.ஆர்.அமீனுக்கு, 2015ஆம் ஆண்டு ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மௌலா யா சல்லி வசல்லிம் எனும் பாடல் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.

அதனைத் தொடர்ந்து தன் தந்தை ஏஆர் ரஹ்மானின் இசையில் தொடர்ந்து பாடல்களைப் பாடி வரும் அமீன், யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் பாடியுள்ளார். மேலும் தனி இசைப்பாடகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஏ.ஆர்.அமீனின் கார் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியது. ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பருடன் கோயம்பேட்டில் இருந்து வந்த கார், எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அனைவரும் தப்பி உள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா