Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெயிலர் திரைப்படம்!
[Thursday 2026-08-06 16:00]

தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமான ஜெயிலர், சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி சரோஃப் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

2023-ஆம் ஆண்டு மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. 2023 தீபாவளி அன்று ஜெயிலர் திரைப்படம் முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதன்பின் பலமுறை ஒளிபரப்பப்பட்டு TRP-யில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஜெயிலர் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஜெயிலர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா