Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல்!
[Thursday 2026-08-06 16:00]

சமீபத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் ஜனநாயகன் திரைப்படம் 15 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கி, இரண்டரை ஆண்டுகளில் முதலமைச்சராகி உள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகவிருக்க வேண்டியது. ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியிட முடியாமல் போனது.

இது விஜய் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்திருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்றபின் 'முதலமைச்சர் விஜய்' நடிக்கும் ஜனநாயகன் என டைட்டில் கார்டுடன் படம் வெளியானது மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது.

தமிழ் திரையுலகில் இருந்து ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அது வேறு மாநிலங்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தாண்டி, தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கிறது என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அதுவும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை; தமிழ்நாட்டில் அந்த படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களே மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

இந்நிலையில், விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் 15 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 நாட்களில் இப்படம் ரூ. 135 கோடி தமிழ்நாட்டில் வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 150 கோடியை எட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா