Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
லோகேஷ் கனகராஜின் DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
[Wednesday 2026-08-05 16:00]

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி என தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இதில், லியோ மற்றும் கூலி ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படம் இயக்கவிருக்கும் நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக DC திரைப்படத்தில் களமிறங்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் DC திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற 7-ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில், DC திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 30 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவிலேயே கோடிகளில் வசூலை செய்து நல்ல வரவேற்பை பெறுகிறதா DC என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா