Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
34 வருடங்களை கடந்த நடிகர் அஜித்!
[Monday 2026-08-03 16:00]

தமிழ் சினிமாவில் கடந்த 34 ஆண்டுகளாக நம்மை மகிழ வைத்த நடிகர் அஜித் குமாரின் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது.

GBU-வை தொடர்ந்து அஜித் நடிப்பில் AK 64 திரைப்படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இதனால் தான் AK 64 படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனால் அஜித்தே தற்போது AK 64 திரைப்படத்தை தயாரிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்றுடன் நடிகர் அஜித் திரையுலகில் காலடி எடுத்துவைத்து 34 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். இந்த சமயத்தில், அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூலித்த டாப் 10 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

குட் பேட் அக்லி - 268 கோடி

துணிவு - ரூ. 210 கோடி

விஸ்வாசம் - ரூ. 190 கோடி

வலிமை - ரூ. 164 கோடி

விடாமுயற்சி - ரூ. 145 கோடி

விவேகம் - ரூ. 128 கோடி

வேதாளம் - ரூ. 125 கோடி

நேர்கொண்ட பார்வை - ரூ. 107 கோடி

ஆரம்பம் - ரூ. 104 கோடி

என்னை அறிந்தால் - ரூ. 95 கோடி

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா