Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகை கயாடு லோஹர் வாங்கும் சம்பளம்!
[Saturday 2026-08-01 15:00]

கன்னடத்தில் வெளியான முகில்பேட் (Mugilpete) எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். பத்தொன்பதாம் நூற்றாண்டு (Pathonpatham Noottandu), அல்லூரி, இ பிரேம் யு, ஒரு ஜாதி ஜாதகம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவர் எப்போது தமிழில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் தமிழ் திரைப்படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதன்பின், ஃபங்கி (Funky), பள்ளிச்சம்பட்டி, இதயம் முரளி என தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக இம்மார்ட்டல், I'm Game, தி பாரடைஸ், மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் கயாடு லோஹர், 2021-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படத்திற்காக ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அன்று லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த கயாடு லோஹர், இன்று கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். ஆம், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவான நானியுடன் இணைந்து 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை கயாடு லோஹர் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது, நடிகை கயாடு லோஹரின் திறமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும், இனி அடுத்தடுத்த பல வெற்றிகளை கொடுத்து மிகப்பெரிய நட்சத்திரமாக இந்திய சினிமாவில் தனி இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா