Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிக்பாஸ் 10வது சீசனில் பிரபல சீரியல் நடிகையா? - கசிந்த தகவல்!
[Thursday 2026-07-30 17:00]

கடந்த 2017ம் ஆண்டு தமிழக மக்களுக்கு என்ன நிகழ்ச்சி என்றே புரியாமல் துவங்கப்பட்டது தான் பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்க 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ள முதல் சீசன் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மக்களுக்கு இந்த ஷோ குறித்து எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை, ஆனால் முடியும் நேரத்தில் இன்னும் சீசன் செல்லக்கூடாதா என ஏங்கிய ரசிகர்கள் உள்ளார்கள். முதல் சீசனை தொடர்ந்து அடுத்தடுத்து 9 சீசன்கள் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.

முதல் சீசன் முதல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இடையில் பிக்பாஸில் இருந்து வெளியேற விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் 10வது சீசன் குறித்த புரொமோக்கள் விஜய் சேதுபதி இடம்பெற ஒளிபரப்பானது. இந்த 10வது சீசனில் என்ன ஸ்பெஷல் என்றால் பிரபலங்களை தாண்டி சாதாரண மக்களும் கலந்துகொள்ளலாம் என்பது தான்.

வரும் செப்டம்பர் மாதம் முதல் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கும் என கூறப்படும் நிலையில் இதில் பங்குபெறும் ஒரு சீரியல் நடிகை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான வில்லியாக மாறிய நடிகை பரீனா 10வது சீசனில் கலந்துகொள்வது உறுதி என்பது போல் செய்திகள் வலம் வருகின்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா