Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
முன்பதிவில் சாதனை படைக்கும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'!
[Sunday 2026-07-26 19:00]

உலக புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் அடுத்த பாகமான 'பிராண்ட் நியூ டே' என்கிற தலைப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகிறது. மார்வெல் யூனிவெர்ஸில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டானியல் கிரேட்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மார்வெல் தயாரிப்பில் வெளியான சாங்சி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் டாம் ஹாலண்ட், சென்டயா, சாடி சிங்க், மார்க் ரஃபல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இப்படி மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், டிக்கெட் முன்பதிவிலேயே வசூல் வேட்டையை தொடங்கிவிட்டது. இந்தியாவில் இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்திற்கு இந்திய பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள சென்சேஷனல் முன்பதிவு வசூலாகும்.

இதன் மூலம், முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டுமே மாபெரும் வசூல் சாதனையை 'பிராண்ட் நியூ டே' படைக்கும் என்றும், இதற்கு முந்தைய திரைப்படமான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படத்தின் வசூல் சாதனையும் முறியடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா