Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
Record Break சாதனை செய்துள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன்!
[Wednesday 2026-07-22 07:00]

ஒரு காட்டில் சிங்கம் வருகிறது என்றால் மற்ற விலங்குகள் வழிவிட்டு தள்ளிப்போகும். அதேபோல் தான் இப்போது தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. 2026 பொங்கலுக்கே ரிலீஸ் ஆக வேண்டிய படம் தான் விஜய்யின் ஜனநாயகன், ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 6 மாதங்கள் போக இப்போது ஜுலை 23ம் தேதி அதிரடி மாஸாக படம் வெளியாக உள்ளது.

விஜய்யின் படம் வெளியாகிறது என்றதும் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருந்த படங்கள் எல்லாம் தள்ளிப்போனது.

7000 முதல் 8000 திரைகளில் படம் வெளியாக இருப்பதாக சொன்ன தகவல் கேட்டதே ரசிகர்கள் வியப்பில் இருக்கிறார்கள். ஒரே ஒரு மன வருத்தம் என்றால் படம் ஏற்கெனவே லீக் ஆனது தான், ஆனால் இப்போது ரிலீஸ் ஆகப்போகும் படத்தில் நிறைய புது விஷயங்களை புகுத்தி இருப்பதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

இந்தியாவை தாண்டி 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜனநாயகன் படம் வெளியாகிறதாம், அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே ஜனநாயகன் படம் செய்துள்ள ஸ்பெஷல் விஷயம் குறித்த தகவல் வலம் வருகிறது. அதாவது விஜய்யின் ஜனநாயகன் படம் தமிழகத்தில் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறதாம். இது Record Break சாதனை என கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா