Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக ஜனநாயகன் படத்தில் நடந்துள்ள ஸ்பெஷல் விஷயம்!
[Monday 2026-07-20 16:00]

ஜுலை மாதம் ஒரு திருவிழாவும் இல்லை என யோசித்திருக்கலாம், ஆனால் இப்போது அப்படி சொல்ல முடியாது. காரணம் என்ன என்பது உங்களுக்கே தெரிந்தது தான், நம்ம தளபதியும் முதலமைச்சருமான விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜுலை 23ம் தேதி படு மாஸாக கொண்டாட்டத்துடன் வெளியாக உள்ளது. அண்ணன் வரார் வழி விடு என இந்த வாரம் வெளியாக இருந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

சிங்கம் போல் சிங்கிளாக வரும் ஜுலை 23ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. விஜய் படம் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் செய்யும், அதிலும் இப்படம் அவரின் கடைசிப் படம், என்னென்ன சாதனைகள் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியாவை தாண்டி 30 நாடுகளில் ஜனநாயகன் ரிலீஸ் என்றும் 7000 முதல் 8000 திரைகளில் படம் வெளியாக இருப்பதாகவும், படத்தில் நிறைய மாற்றங்கள் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் படத்தில் தமிழ் சினிமாவில் முதன்முறையாக நடந்துள்ள ஒரு ஸ்பெஷல் விஷயம் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது ஜனநாயகன் படத்தில் 3 அமைச்சர்கள் நடித்துள்ளார்களாம், விஜய்யை தாண்டி அமைச்சர்கள் ஸ்ரீநாத் மற்றும் அருண்ராஜ் நடித்துள்ளார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா