Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
புகழ்பெற்ற பாடகி எஸ் ஜானகி காலமானார்!
[Sunday 2026-07-12 07:00]

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி (ஜானகி அம்மா) 88 வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். மைசூரில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் குயில் (Nightingale of South India) என அழைக்கப்படும் ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களை தனது காந்தக் குரலால் ஈர்த்தவர்.

தமிழ் சினிமாவில், எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் வரிசையில் அனிருத் வரை பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார்.

2013-ஆம் ஆண்டு, இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் விருதை அவர் நிராகரித்தார். தனது பங்களிப்பு மிகப்பெரியது என்பதால், பாரத ரத்னா விருதே தக்க அங்கீகாரம் என அவர் தெரிவித்திருந்தார்.

அவரது மறைவுச் செய்தி இசை உலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தலைமுறைகளாக ரசிகர்களை கவர்ந்த அவரது இனிய குரல், இந்திய இசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா