Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர்!
[Wednesday 2026-07-08 07:00]

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான ஜோசப் விஜய் தனது அதிகாரப்பூர்வ 'CMOTamilNadu' எக்ஸ் பக்கத்தில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்யிய் பதிவில் குறிப்பிட்டதாவது "உங்கள் பெயர் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் மைதானத்தில் எழும் விசில் சத்தமும், நீங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் பதித்திருக்கும் இடமும் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமது 'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

உங்கள் அசாதாரண கிரிக்கெட் பயணம், அமைதியான தலைமைத்துவம், எளிமையான குணம் ஆகியவை தொடர்ந்து தலைமுறைகளை ஊக்குவித்து வருகின்றன. நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், இன்னும் பல வெற்றிகளுடனும் வாழ வாழ்த்துகள். உங்களுக்காக ஒலிக்கும் விசில் சத்தம் நாளுக்கு நாள் இன்னும் அதிகரிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா