Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சட்டவிரோதமாக வெளியான ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?
[Thursday 2026-07-02 16:00]

இந்த 2026ம் வருடம் மட்டும் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகியிருந்தால் பட்டிதொட்டி எங்கும் கலக்கி பாக்ஸ் ஆபிஸை தெறிக்க வைத்திருக்கும். விஜய்யின் ரசிகர்கள் கடந்த வருடம் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடந்ததையே பெரிய அளவில் கொண்டாடினார்கள். பட ரிலீஸை அதைவிட கோலாகலமாக செம மாஸ் கொண்டாட்டங்களோடு படத்தை வரவேற்க தயாராக இருந்தனர்.

ஆனால் பட தணிக்கை சான்றிதழ் பெற சிக்கல்களை சந்தித்ததால் ரிலீஸ் ஆகவில்லை, படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்படி, ஜனநாயகன் படத்திற்கு A தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது.

விஜய் படம் வரும் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் முதலமைச்சராகி விஜய் ரசிகர்கள் பெரிய சந்தோஷத்தை கொடுத்தார். இப்போது முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் தான் ஜனநாயகன் படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் புகார் அளிக்க சென்னை சைபர் க்ரைம் போலீசார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர்.

வழக்கில் கைது செய்யப்பட்ட ரஜினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியிட்டுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா