Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரஷ்ய ஓட்டுனருக்கு கார் பரிசளித்த அனுஷ்கா!
[Sunday 2020-03-15 18:00]

2005ல் தெலுங்கில் பூரி ஜெகநாத் டைரக்சனில் நாகார்ஜுனா ஜோடியாக சூப்பர் என்கிற படத்தில் அறிமுகமான அனுஷ்கா, தற்போது தனது திரையுலக பயணத்தில் வெற்றிகரமாக 15ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையடுத்து அனுஷ்காவுக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தநிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் ரெட்டி என்பவர் அனுஷ்காவின் தாராள மனம், பிறருக்கு உதவி செய்யும் குணம் குறித்து ஆச்சர்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஜார்ஜியா நாட்டிற்கு ஒருமுறை தயாரிப்பாளர் ஷ்யாம் பிரசாத் சென்றிருந்தபோது, ஷாஷா என்கிற ரஷ்ய டிரைவரை சந்திக்க நேர்ந்துள்ளது.

அப்போது அவர் தெலுங்கு தயாரிப்பாளர் என்பதை அறிந்து கொண்ட ஷாஷா, நடிகை அனுஷ்கா பற்றி சிலாகித்து கூறி இருக்கிறார். இரண்டாம் உலகம் படப்பிடிப்பிற்காக அனுஷ்கா ஜார்ஜியா வந்தபோது ஷாஷா தான் அவருக்கு கார் டிரைவராகவும் பாதுகாவலராகவும் இருந்துள்ளார். ஒருநாள் பைனான்சியர்கள் பணம் கட்டவில்லை என அவரது காரை பறிமுதல் செய்து சென்றுவிட்டார்கள்.

அன்றைய தினம் படப்பிடிப்பிற்கு ஷாஷாவால் போக முடியவில்லை. மறுநாள் விபரம் அறிந்த அனுஷ்கா, அங்கிருந்து படப்பிடிப்பு முடிந்து கிளம்புவதற்கு முன் அந்த டிரைவருக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துவிட்டுத்தான் இந்தியா கிளம்பியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா