Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
4 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பிய லட்சுமி மேனன்!
[Sunday 2020-03-15 08:00]

நடிகை லட்சுமி மேனன் கடந்த 2012ல் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் நடித்த கும்கி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. பின்னர் நடிகை லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். மேலும், இவர் கடைசியாக இயக்குனர் ரத்னம் சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க திரைப்படத்தில் நடத்திருந்தார்.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் 4 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இப்படியான செய்திகள் இணையத்தில் உலா வருகின்றது. மேலும், லட்சுமி மேனன் இதற்கு முன் குட்டிபுலி, கொம்பன் போன்ற திரைப்படங்களில் இதே இயக்குனருடன் பணியாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா