Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகைகளை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்!
[Friday 2020-03-13 08:00]

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின் ஸ்டீன் (67) மீது நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்பட 80க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் கூறினர். இதுபோல் நடிகை ரோஸ் மெக்கோவன், அன்ன பெல்லா உள்ளிட்ட மேலும் பல நடிகைகளும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் ஹார்வி உடல்நிலை சரியில்லாமல் இருசக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். ஹார்வியுடன் அவருடைய வக்கீலும் வந்தார்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஹார்வி வெய்ன்ஸ்டீன் உடல்நிலை சரியில்லாதவர். எனவே இவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும். இதுவே அவருக்கு ஆயுள் தண்டனை போல் இருக்கும் என்று ஹார்வி தரப்பு வக்கீல்கள் வாதாடினார்கள். ஆனால் நீண்ட காலமாக பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல்கள் வாதாடினார். விசாரணையின் முடிவில் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா