Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வைத்தியசாலையில் மோசமான நிலையில் இருக்கும் தொகுப்பாளர் - நேரில் சென்று உதவிய விஜய் சேதுபதி! Top News
[Wednesday 2020-03-11 18:00]

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் லோகேஷ் பாபு. இவருக்கு சமீபத்தில் பக்கவாதம் வந்து மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவருடைய மருத்துவ செலவுக்காக ரூபாய் 7 லட்சம் தேவை என்று இவரது நண்பர் குட்டி கோபி சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். இதன்பின், ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது என்று, குட்டி கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆப்ரேஷனுக்கு பிறகு தற்போது லோகேஷை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று பார்த்து உதவியுள்ளார். இவர் விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடி தான் எனும் படத்தில் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா