Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய்சேதுபதியை முந்திய சந்தானம்!
[Tuesday 2020-03-10 08:00]

தொலைக்காட்சியில் இருந்து மன்மதன் படம் மூலம் சினிமாவுக்கு வந்த சந்தானம் முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். காமெடி நடிகராக உச்சத்தில் இருந்தபோதே கதாநாயகனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து கதாநாயகன் வாய்ப்புகள் குவிந்தன. அனைத்து படங்களுமே வியாபார ரீதியாக நல்ல வசூல் பார்த்தன. ஒவ்வொரு வருடமும் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்று விஜய்சேதுபதி பெயர் எடுத்து வருகிறார்.

அதை முறியடிக்கும் வகையில் சந்தானம் கதாநாயகனாக நடித்து இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வர உள்ளன. ஏற்கனவே இந்த வருடம் தொடக்கத்தில் டகால்டி படம் வந்தது. தற்போது சர்வர் சுந்தரம், பிஸ்கோத், டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி, தில்லுக்கு துட்டு-3 ஆகிய 6 படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படங்கள் அனைத்தும் இந்த வருடமே அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் பல படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ஏ1 படத்தை எடுத்த ஜான்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். ராஜேஷ்.வி இயக்கும் படமொன்றிலும் நடிக்க உள்ளார். வஞ்சகர் உலகம் படத்தைத் தயாரித்த பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா