Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மிஷ்கின்!
[Tuesday 2020-02-25 18:00]

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் ஒரு நேர்மையான டிடெக்டிவ் அதிகாரியாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்திருப்பார்கள். இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் இராண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினர். இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தால், துப்பறிவாளன் 2 படத்திற்காக மிஷ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டதாக விஷால் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டு, மீதி படத்தை விஷாலே இயக்க உள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மிஷ்கின் கிண்டலாக பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “நான் விஷாலிடம் ரூ.40 கோடி கேட்டதாக வந்த தகவலில் உண்மை இல்லை. உண்மையில் அவரிடம் ரூ.400 கோடி கேட்டேன். இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அதற்கு ரூ.100 கோடி செலவாகி உள்ளது. மீதி காட்சிகளை படமாக்க ரூ.400 கோடி தேவை. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிக்கும் காட்சியை எடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு மட்டுமே ரூ.100 கோடி செலவாகும். எனவேதான் மொத்தமாக அவரிடம் ரூ.400 கோடி கேட்டேன்” என்று பதில் அளித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா