Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியன் 2 படப்பிடிப்பில் மூவர் இறக்க காரணமான கிரேன் ஆப்ரேட்டர் பரபரப்பு வாக்குமூலம்!
[Sunday 2020-02-23 08:00]

இந்தியன் 2 படப்பிடிப்பில் மூன்று பேர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படும் கிரேன் ஆப்ரேட்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் விபத்து தொடர்பில் ஃபெப்சி அமைப்பு பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில், புதன்கிழமை இரவு நடந்தது. அப்போது கிரேன் இயந்திரம் சரிந்து, உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இயந்திர ஆபரேட்டர் ராஜன் கவனக்குறைவாக இருந்ததே விபத்துக்குக் காரணமென குற்றம்சாட்டப்படுகிறது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை பொலிசார் கைது செய்தனர். பொலிசில் அவர் அளித்த வாக்குமூலத்தில், கிரேன் மீது படத்தின் ஒளிப் பணியாளர்களின் சுமையை ஏற்ற வேண்டாம் என நான் சொன்னேன்.

ஆனால் அதை யாரும் கேட்கவில்லை என கிரேன் ஆபரேட்டர் கூறியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முன்பெல்லாம் தயாரிப்பாளர்களே ஸ்டுடியோ வைத்திருந்தனர். அதனால் அவர்களே பொறுப்பு எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இது போன்ற ஸ்டூடியோக்களில் எந்த பாதுகாப்பும் இல்லை என்றும் ஈவிபியில் இறந்த சடலங்களை எடுத்து செல்லக்கூட வாகனங்கள் இல்லை என்றும் கூறினார். இனி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஃபெப்சி உடன் ஒப்பந்தம் மேற்கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு என முடிவெடுத்துள்ளதாகவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

இந்நிலையில், விபத்து நடந்தது கிரேன் என்ற பாரந்தூக்கி என்று பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், அது கிரேன் அல்ல பூம்லிப்ட் எனப்படும் ஒரு வகை நகரும் இயந்திரம் என்று அதன் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த Boom-lift என்பது உயரமான கட்டடங்களுக்கு வெளிப்புறம் இருந்தவாறு சிலவேலைகளைச் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இதன் கூடையில் 500 கிலோவுக்கு மேல் பாரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதாவது இரண்டு ஆள் கொஞ்சம் வேலைக்கு வேண்டிய பொருள்கள் தவிர மேலே அதிகமாக பாரம் ஏற்றக்கூடாது. மேலே உள்ள ஆள் முழு உடல் பாதுகாப்புடன் பாதுகாப்புப் பட்டையை அணிந்து நங்கூரமிட்டிருக்க வேண்டும் என தெரியவந்துள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா