Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை!
[Thursday 2020-02-13 18:00]

பிரியாணி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் லீனா மரியா பால். மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி படத்திலும், மலையாளத்தில் ரெட் சில்லிஸ், ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா ஆகிய படங்களில் நடித்திருந்தார். கொச்சியில் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறாராம். இவர் தனது காதலருடன் சேர்ந்து சென்னை அம்பத்தூரில் உள்ள வங்கியில் போலி ஆவணம் மூலம் கடன் மோசடி செய்திருப்பதாக வந்த புகாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சாம்பசிவராவ் தன்னிடன் சிபிஜி அதிகாரிகள் என கூறி 2 பேர் பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக புகார் கூறியிருக்கிறார். விசாரணையில் அந்த இருவர் லீனாவின் காதலரின் நெருங்கிய நண்பர்களாம். இதனால் லீனாவி வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் வழக்கில் ஆஜராகுமாறு பலமுறை வந்த சிபிஐ அழைப்பையும் அவர் கண்டுகொள்ளவேயில்லையாம். இந்நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா