Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அழவைக்கிற படங்களை பார்க்க மாட்டேன் - தமன்னா!
[Sunday 2020-02-09 08:00]

தமன்னா நடிப்பில் கடந்த வருடம் கண்ணே கலைமானே, தேவி-2, பெட்ரோமாக்ஸ், ஆக்‌ஷன் ஆகிய 4 படங்கள் வந்தன. தற்போது போலோ சுதியான் என்ற இந்தி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமா என்பது வினோதமான சாதனம். திரையில் எதையாவது சொல்லுங்கள். எதையாவது காட்டுங்கள். ஆனால் படத்தை பார்க்கிறவர்கள் இரண்டரை மணி நேரம் வெளி உலகத்தை மறந்து ஜாலியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் அழவைக்கிற படங்களை பார்க்க மாட்டேன். அவற்றில் நடிக்கவும் விருப்பம் இருக்காது.

இது மாதிரி படங்கள் பார்க்கும்போது நமக்கு உள்ளேயே ஒரு எதிர்மறை உணர்வு வந்து விடும் என்ற பயம் ஏற்படும். நமது இதயமும் பாரமாகி விடும். மனது கலங்கி கண்ணீர் வரும். பெண்களை கேவலப்படுத்துவது மாதிரியான கதாபாத்திரங்களிலும் நான் நடிக்க மாட்டேன். சினிமாவை பற்றி நாம் ஏதாவது கற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.

அது உற்சாகத்தை கொடுப்பது மாதிரியும், கஷ்டங்களை மறக்கிற மாதிரியும் இருக்க வேண்டும். படங்களில் சிறிய அறிவுரையும் இருக்க வேண்டும். கெட்ட விஷயங்களை திணிப்பது மாதிரியும், தெரியாதவர்களுக்கு கெட்ட விஷயங்களை தெரியப்படுத்துவது மாதிரியும் படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தமன்னா கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா