Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிகில் சம்பளம் தொடர்பாக விஜயிடம் வருமான வரித்துறை விசாரணை!
[Wednesday 2020-02-05 17:00]

பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் தொடர்பாக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விநியோகித்திருந்தது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், இன்று காலை 10 மணி முதல் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமையகம், வில்லிவாக்கம், தியாகராயநகர், நாவலூர், மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் பிகில் படத்துக்கு பைனான்ஸ் செய்ததாக கூறப்படும் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளரான அன்புச்செழியனுக்கு சொந்தமாக தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அன்புச்செழியனின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையொட்டி அந்த அலுவலகத்துக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த சோதனையின்போது, நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக அளிக்கப்பட்ட சம்பளம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யிடம், கேரவேனில் வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றனர். நடிகர் விஜய் தனது காரில் முன்னே செல்ல வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்து செல்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா