Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தன்னை ஏமாற்றியதாக கூறிய சனம் ஷெட்டி: தர்ஷன் கொடுத்த பதிலடி!
[Saturday 2020-02-01 17:00]

பிக்பாஸ் தர்ஷன மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் பிரச்சனை பற்றி பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. நேற்று சனம் ஷெட்டி பேட்டி அளித்த நிலையில் இன்று தர்ஷன் தன் தரப்பு வாதத்தை பேட்டியில் தெரிவித்துள்ளார். இரண்டு மாதம் முன்பே பிரேக்கப் செய்துவிட்டேன் என கூறியுள்ளார் அவர். "அவர் என் profile பிக்பாஸ் டீமுக்கு அனுப்பியது உண்மைதான். ஆனால் அது ரிஜெக்ட் ஆகிவிட்டது. அதன்பிறகு பிக்பாஸ் 2 புகழ் ரம்யா தான் என் ப்ரோபைலை மாடல் என கூறி அனுப்பிவைத்தார். அதன் பிறகு தான் என்னை interviewக்கு அழைத்தனர். அது பற்றி சனம் ஷெட்டியிடம் கூறியபோது interviewல் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என கூறாதே, சொன்னால் என்னை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என கூறினார். நானும் அவர் சொன்னதை கேட்டு நானும் நிச்சயதார்த்தத்தை மறைத்தேன்."

"பிக்பாஸ் முடித்துவிட்டு வெளியில் வந்த பிறகு நான் வேறு எந்த பிக்பாஸ் பெண் போட்டியாளர்களிடமும் பேசக்கூடாது, இன்ஸ்டாகிராமில் unfollow செய்யச்சொன்னார். அவர் பார்ட்டியில் அவரது Ex உடன் இருந்ததை என் நண்பர்கள் கூறினார்கள். பிகினியில் interview கொடுத்ததை பார்த்து ஷாக் ஆனேன். அதன்பிறகு இது செட் ஆகாது என பிரேக்கப் செய்துவிட்டேன்."

"பின்னர் என்னை பற்றி தவறாக பலரிடம் பேசியுள்ளார். நான் ஒப்பந்தமாகியிருந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் சென்று என்னை பற்றி தவறாக பேசினார்." "தற்கொலை செய்துகொள்வேன் என்று கூட மிரட்டினார். பிரச்சனை அதிகமானதால் தற்கொலை முயற்சி கூட செய்தார். என் காதல் தான் முக்கியம் என நினைத்திருந்தால் வந்து என்னிடம் பேசியிருப்பார்" என தர்ஷன் கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா