Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
74 வயது தயாரிப்பாளரை ஐந்தாவதாக திருமணம் செய்த நடிகை!
[Thursday 2020-01-23 18:00]

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன், பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006-ம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்தனர். 2014-ம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பமீலா ஆண்டர்சன் அடுத்து ‘பேட்மேன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) காதலித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் அவரை முறைப்படி திருமணம் செய்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் கடந்த திங்கட்கிழமை எளிமையாக நடந்துள்ளது. பமீலாவும் ஜான் பீட்டரும் முப்பது வருடத்துக்கு முன் முதன்முறையாக, டேட்டிங் சென்றனர்.

இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருமணம் பற்றி பமீலா ஆண்டர்சன் கூறும்போது, நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்கள் காதல் ஒப்பிடமுடியாதது என்று தெரிவித்துள்ளார். புதிதாக திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா