Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிப்பதை நிறுத்தவிருக்கும் எமி ஜாக்சன்!
[Thursday 2020-01-23 18:00]

மதராசபட்டணம், தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராததால் லண்டன் புறப்பட்டு சென்றார். பாய்பிரண்ட் ஜார்ஜ் பனயியோடோவுடன் காதலில் இருந்தார். இதில் எமி கர்ப்பமானார். இதையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் ஆகாமலேயே கடந்த ஆண்டு எமி ஜாக்ஸன் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்து ஆண்ட்ரியாஸ் என பெயரிட்டார். குழந்தை வளர்ப்பில் கவனமாக இருக்கும் எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டாகிராமில் தனது 4 மாத குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 'இன்றுடன் 4 மாதம் ஆகிறது. நீ எனக்கு குழந்தையாக பிறப்பதற்கு முன் எனது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நினைக்க கடினமாக இருக்கிறது.

நீ ஒரு அதிசயமான குழந்தை. உனக்கு அம்மாவாக இருக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்' என குறிப்பிட்டிருக்கிறார் எமி ஜாக்ஸன். குழந்தை பெற்ற பிறகே திருமணம் செய்துகொள்வது என்ற முடிவில் இருந்த எமி தனது பாய் பிரண்டை எப்போது மணக்கப்போகிறார் என்பதுபற்றி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. புதிய பட வாய்ப்புகளும் எதுவும் தேடி வராத நிலையில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆகிவிட்ட எமி ஜாக்சன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா