Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எனக்கு அவர்தான் தமிழ் கற்றுக் கொடுத்தார் - பி.சுசிலா!
[Wednesday 2020-01-15 08:00]

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர். அதன்பின் பாடகி பி.சுசிலா பேசும்போது, ‘எனக்கு என்ன பேசுறது தெரியல, 85 வயதாகி விட்டது. பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள்.

எனக்கு தமிழ் சொல்லி கொடுத்து ஏவிஎம் மெய்யப் செட்டியார். அதனால் தான் இப்போது தமிழில் பேச முடிகிறது. எனக்கு தமிழ் பத்திரிகையாளர்கள் அமைப்பின் விழாவில் கலந்து கொள்ள இடம் கொடுத்ததுற்கு நன்றி என்று கூறியதோடு, "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை பாடினார். பி.சுசிலா அம்மையார் இது போன்ற பொது நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. வயது 85 ஆகிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் சங்க நிகழ்வில் கலந்து கொண்டது சந்தோஷமாக இருப்பதாக கூறினார் பி.சுசிலா.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா