Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பாலிவுட்டில் அடி எடுத்து வைக்கும் ஜீவா!
[Monday 2020-01-13 17:00]

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ல் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. கபீர்கான் இயக்கும் இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். இதன்மூலம் ஜீவா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதனிடையே இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவாவின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜீவாவுக்கு பாராட்டுகளும் குவிகின்றன. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. அதுபோல் 83 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா