Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும் - டி.ராஜேந்தர்!
[Saturday 2020-01-04 17:00]

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “1979-ம் ஆண்டு ஒரு தலை ராகம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 40 ஆண்டு கால அனுபவத்தை பெற்றுள்ளேன். இந்த அனுபவம் முழுமையாக சினிமாவிற்கு தேவை என்று பலர் வற்புறுத்தியதால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். மத்திய அரசு விதிக்கும் ஜி.எஸ்.டி வரியை தவிர மற்ற எந்த வரியையும் மாநில அரசுகள் விதிப்பதில்லை. தமிழகத்தில் மட்டும் 8 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது.

இதற்கு பல தரப்பட்ட சினிமா சங்கத்தினரிடம் கலந்து ஆலோசித்து ஒரு சிறப்பான முடிவை எடுத்து அரசிடம் கோரிக்கையை முன் வைப்போம். டிக்கெட் கட்டணம் முடிந்தவரை குறைக்கப்பட்டு சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் திரையரங்குக்கு வந்து படத்தை பார்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்படும். தமிழ் சினிமா தற்போது சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு கிடைக்க நாங்கள் முயற்சி செய்வோம்.” இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா