Untitled Document
November 22, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மகள் குறித்து அவதூறு செய்திகள்: கோபத்தில் அர்ஜுன் எடுத்த அதிரடி முடிவு!
[Friday 2026-11-20 07:00]

தமிழ் சினிமாவில் அக்ஷன் கிங் அர்ஜுன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன். இவரது வீட்டில் கடந்த சில வருடங்களாக விசேஷங்கள் நடக்கிறது. அண்மையில் நடிகர் அர்ஜுன் இரண்டாவது மகளின் திருமணம் வெளிநாட்டில் கோலாகலமாக நடந்தது. நடிகர் அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2024ம் ஆண்டு நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் நடைபெற அதில் ஐஸ்வர்யா கலந்துகொண்டாலும் உமாபதி ராமைய்யா கலந்துகொள்ளவில்லை. இதனால் சிலர் திருமணம் ஆன சில வருடங்களில் பிரிந்துவிட்டார்கள் என பேச துவங்கினர்.

முக்கியமாக ஐஸ்வர்யா அர்ஜுன் அதிகம் மது அருந்தியதால் தான் கணவன்-மனைவி உறவுகளுக்குள் பிரச்சனை வந்தது என அவதூறுகள் பரவ துவங்கின.

இந்த அவதூறுகளை கண்ட நடிகர் அர்ஜுன் வெளியிட்ட அறிக்கையில், நடிகர்களாகிய நாங்கள் பொதுவாழ்க்கையில் இருக்கும்போது, ஊகங்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம்.

எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துகளைத் தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

அமைதி காப்பதே பல நேரங்களில் கண்ணியமான அணுகுமுறை என்று நாங்கள் நம்பி வந்திருக்கிறோம். இந்த விஷயத்தில் அப்படி முடியாது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



16 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Sunday 2026-11-22 18:00]

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 16 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.



அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் விஜய் அணிந்து வந்த ஆடையின் விலை!
[Sunday 2026-11-22 18:00]

நேற்று அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழா ஆடம்பரமாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். இந்த திருமண வரவேற்பில் விஜய் அணிந்து வந்த ஆடை அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், அந்த ஆடையின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.



காட்ஸில்லா மைனஸ் ஜீரோ: திரை விமர்சனம்!
[Saturday 2026-11-21 18:00]

ஜப்பானிய மொழியில் காட்ஸில்லா மைனஸ் ஒன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள காட்ஸில்லா மைனஸ் ஜீரோ எப்படி இருக்குன்னு பார்ப்போம் வாங்க. 1947-யில் காட்ஸில்லா ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் போரின் விளைவுகளில் இருந்து ஜப்பான் மீண்டு வருகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், காட்ஸில்லாவின் ஜின்சா தாக்குதலில் இருந்து தப்பிய நோரிகா ஓஷியை திருமணம் செய்துள்ளார் முன்னாள் தற்கொலைத் தாக்குதல் விமானி கோய்ச்சி ஷிகிஷிமா.



ஓம் திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-11-21 18:00]

இந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியான ஓம் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், முதல் நாள் தமிழ்நாடு வசூல் எவ்வளவு வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான திரைப்படம் ஓம். சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், மம்மூட்டி, சாய் பல்லவி, இந்திரன்ஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



ரூ. 2000 கோடி வசூல் செய்யுமா ராமாயணா?
[Saturday 2026-11-21 18:00]

ராமாயணா திரைப்படம் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ. 2000 கோடி வசூல் என்கிற இமாலய இலக்கை இப்படம் எட்டுமா, இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.



கயாடு லோஹர் நடிப்பதை தாண்டி செய்யும் ஒரு விஷயம்!
[Saturday 2026-11-21 07:00]

நடிகை கயாடு லோஹர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கிறது. இளசுகளை அதிகம் கவர்ந்து வரும் கயாடு லோஹருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



புதிய கார் வாங்கியுள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா!
[Saturday 2026-11-21 07:00]

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஆசை நாயகியாக இருப்பவர் தான் நடிகை ஆல்யா மானசா. நடனத்தில் ஆர்வம் கொண்டவர் டான்ஸ் ஷோக்கள் மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தார். அப்படியே விஜய் டிவி பக்கம் சீரியல் நாயகியாக களமிறங்க ராஜா ராணி சீரியலில் நடித்தார், முதல் சீரியலே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது.



வசூலில் அடிதூள் கிளப்பும் 'சீன்'!
[Friday 2026-11-20 16:00]

2026 யாருக்கு எவ்வளவு ஸ்பெஷல் என்பது தெரியவில்லை. ஆனால் நடிகர் சூர்யாவிற்கு இந்த வருடம் மிகவும் ஸ்பெஷலோ ஸ்பெஷல் தான். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராக இருந்த கருப்பு படம் மக்களிடம் போய் சேர்வதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆனதும் தாறுமாறு வெற்றியை கண்டது, பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது.



ஆண் குழந்தைக்கு தாயான நடிகை சமந்தா!
[Friday 2026-11-20 16:00]

கர்ப்பமாக இருந்த சமந்தாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சமந்தா, இந்த ஆண்டு மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் மூலம் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்தார். இப்படத்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வந்த நிலையில், அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் வகையில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வில் இருந்து வந்தார்.



GTA 6 ஒரே நாளில் ரூ. 22,000 கோடி வருவாய்!
[Friday 2026-11-20 16:00]

நேற்று (நவம்பர் 19) வெளியான கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI (GTA 6) கேம் ஒரே நாளில் 22,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம் வாங்க. GTA கேம் என்பது விளையாட்டு என்பதை தாண்டி பலருக்கும் அது ஒரு எமோஷனலான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக GTA 5 கடந்த 13 ஆண்டுகளாக கேமிங் உலகை ஆண்ட ஒன்று. இதுவரை இந்த கேம் 35 million copies விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு இந்த கேம் மீது ரசிகர்கள் காதல் கொண்டுள்ளனர்.



நிகழ்ச்சியில் மிஷ்கின் தவறாக தொட்டாரா? - சர்ச்சைக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்!
[Friday 2026-11-20 07:00]

கீர்த்தி சுரேஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. கடைசியாக இவரது நடிப்பில் டோரதி, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் வந்தன. இதில் கீர்த்தி சுரேஷிற்கு டோரதி படம் மட்டுமே வெற்றியை கொடுத்தது, ஆனால் இதில் கொஞ்ச நேரம் மட்டுமே இவரது காட்சிகள் வரும். அடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சத்தியவான் சாவித்திரி என்ற படம் வெளிவர உள்ளது.



இலங்கையில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Thursday 2026-11-19 16:00]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் இலங்கையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதனை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க. ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், உலகளவில் அப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் ஏற்கனவே பிளாக்பஸ்டர் ஆன திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் சொல்லவே தேவையில்லை.



இயக்குநரான சந்தானத்தின் மகன்!
[Thursday 2026-11-19 16:00]

நடிகர் சந்தானத்தின் மகன் தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் டிவி சீரியல் நடிகர் குறிஞ்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் அடுத்ததாக லவ் பைட் திரைப்படம் வெளியாகிறது. Zombie ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவான இப்படத்தை செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.



சிறு வயதிலேயே முதலை, ஒட்டகம் சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்: சமைத்து கொடுத்த கமல் ஹாசன்!
[Thursday 2026-11-19 16:00]

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் சிறுவயதில் தனக்கு பல வித்தியாசமான உணவு வகைகளை சமைத்து கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் நாளை தெலுங்கில் AOT திரைப்படம் வெளியாகிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து Train திரைப்படத்தில் நடித்துள்ளார்.



பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மீது பாலியல் புகார்!
[Thursday 2026-11-19 07:00]

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் ரவிச்சந்திரன். அவர் இதற்கு முன் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரவிச்சந்திரன் பாஜக-வின் கலை மற்றும் இலக்கிய பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா