Untitled Document
November 18, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
"இனி செருப்பு போடமாட்டேன்" - நடிகர் விஜய் ஆண்டனி!
[Tuesday 2026-11-17 07:00]

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டிலுமே ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் அடுத்து அப்பா குட்டி என்ற படம் திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி ஏன் தற்போது செருப்பு அணியாமல் எல்லா இடங்களுக்கும் செல்கிறார் என்கிற காரணத்தை அப்பா குட்டி பட விழாவில் அவரது மனைவி தெரிவித்து இருக்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட அவரது மகள் தான் அதற்கு காரணம்.

மூத்த மகள் மீரா கல்லூரி செல்வதற்காக 50க்கும் மேல் ஷூக்கள் வாங்கி வைத்திருந்தோம். ஆனால் அவர் அவற்றை அணியாமல் சென்றுவிட்டாள்.

அது எல்லாம் வீட்டில் தான் இருக்கிறது. அதனால் இனி நான் செருப்பு போடவே மாட்டேன் என விஜய் ஆண்டனி முடிவெடுத்துவிட்டார் என பாத்திமா விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com



12 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-11-17 16:00]

ராமாயணா திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 12 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். தங்கல் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இயக்குநர் நிதேஷ் திவாரி. இவர் இயக்கத்தில் ரூ. 2000 பட்ஜெட்டில் பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக, சாய் பல்லவி சீதையாக மற்றும் யஷ் ராவணனாக நடித்துள்ளனர்.



அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'ஜேம்ஸ் பாண்ட்' பட அறிவிப்பு!
[Tuesday 2026-11-17 16:00]

ஹாலிவுட் திரையுலகில் இருந்து இந்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த படம் 'ஜேம்ஸ் பாண்ட்'. இப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் ஹீரோவாக நடிக்கிறார். அதைப்பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.



நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்தா?
[Tuesday 2026-11-17 07:00]

சினிமா துறை பிரபலங்களில் விவாகரத்து செய்திகள் தொடர்ந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. ஜீ.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி நடிகர் விஜய், பவன் கல்யாண் வரை இந்த லிஸ்ட் நீள்கிறது. இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது கணவர் இயக்குனர் வம்சியை விவாகரத்து செய்வதாக தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.



வட அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்த ஜெயிலர் 2!
[Monday 2026-11-16 16:00]

ஜெயிலர் 2 திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த நிலையில், வட அமெரிக்காவில் இப்படம் இதுவரை செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2.



ராமாயணா படக்குழுவின் அடுத்த மாஸ் பிளான்!
[Monday 2026-11-16 16:00]

பான் இந்திய படங்கள் அதிகம் வருகிறது, ரிலீஸ் ஆன எல்லா படங்களுமே ஹிட்டாகிறதா என்றால் சந்தேகம் தான். ஒரு சில படங்கள் க்ளிக் ஆகும், பல படங்கள் வந்த வேகம் தெரியாமல் சென்றுவிடும். இந்த பான் இந்தியா படங்கள் லிஸ்டில் சமீபத்தில் இணைந்த திரைப்படம் தான் ராமாயணா.



அனிருத்-காவ்யா மாதவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா?
[Monday 2026-11-16 16:00]

தமிழ் சினிமாவில் Most Eligible Bachelorஆக இருந்தவர் தான் இசையமைப்பாளர் அனிருத். கடந்த 2012ம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக களமிறங்க தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடித்த திரைப்படம் 3. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியவர் தான் அனிருத் தற்போது இசையமைப்பாளராக களமிறங்கி 15 வருடங்கள் ஆகிவிட்டது, தனது 15 வருட திரைப்பயணத்தை பற்றி இன்று அனிருத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.



சூப்பர் சிங்கர் ஜூனியர் 11 டைட்டில் ஜெயித்த டெனின் பெர்னோ!
[Monday 2026-11-16 07:00]

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். உலகம் முழுக்க தமிழர்களை அதிகம் பேரை கவர்ந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 11ம் சீசன் நடைபெற்று வந்த நிலையில் அதன் பைனல் இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.



கில்லி பட விஜய்யின் தங்கைக்கு திருமணம் முடிந்தது!
[Monday 2026-11-16 07:00]

கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த நடிகை ஜெனிஃபருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது. திருமண வீடியோவை பிரபல சின்னத்திரை நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



நயன்தாரா படத்திற்கு இப்படியொரு நிலைமையா?
[Sunday 2026-11-15 15:00]

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகை நயன்தாரா - இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தில் ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி, யோகி பாபு, இனியா என பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



Wildwood (animation): திரை விமர்சனம்!
[Sunday 2026-11-15 15:00]

மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவெர்ஸ் (He-Man) திரைப்படத்தின் படுதோல்விக்குப் பிறகு, டிராவிஸ் நைட் இயக்கத்தில் வெளியாகியுள்ள Wildwood அனிமேஷன் திரைப்படம் நம்மை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க. போர்ட்லேண்டைச் சேர்ந்த ப்ரூ மெக்கீல் என்ற சிறுமி, தனது பெற்றோர் மற்றும் நடக்க பழகாத தம்பி மேக் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். ப்ரூவின் தந்தை தனது மகனுக்கு பேண்டஸி கதை ஒன்றைக் கூறி, அந்த காட்டுப்பகுதிக்கு எப்போதும் போகக் கூடாது என்று சொல்கிறார்.



Mr. Queen வெப் சீரிஸ் - சிறப்பு பார்வை!
[Sunday 2026-11-15 15:00]

அமேசான்-ல் கொரியன் டிராமா குவிந்து இருக்கிறது, அந்த வகையில், தற்போது ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்து இழுத்த ஒரு சீரிஸ் மிஸ்டர் குயின். சரி, இந்த சீரிஸ் எப்படி இருக்கு பார்ப்போம். படத்தின் நாயகன் ஒரு Chef, அதே நேரத்தில் பொறுப்பே இல்லாமல், பார்ட்டி, பொண்ணுங்க என இருக்கும் கேரக்டர். இவர் ஒரு நாள் ஒரு பெரிய அதிகாரிக்கு சமைத்துக் கொடுத்ததில் மீன் தூண்டில் இருக்க, இவரை கைது செய்ய போலீஸ் வருகின்றது, அங்கிருந்து தப்பிக்க முற்படும் போது அவர் நீச்சல் குளத்தில் குதிக்க, அப்போது அவர் தலையில் அடிப்பட்டு எந்திரிக்கும் போது பல வருடம் பின்னோக்கி சென்று ராஜாக்கள் காலத்தில் எழுந்திருக்கிறார்.



பழம்பெரும் நடிகர் கிரி பாபு காலமானார்!
[Sunday 2026-11-15 15:00]

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரான கிரி பாபு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருடைய வயது 83. ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் கிரி பாபு. இளம் வயதிலேயே நாடக கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் திரையுலகில் நுழைந்தார். 1973-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே மாயா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதலில் கதாநாயகனாக நடித்து வந்தாலும், பின் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார்.



சீன் படத்தின் ஓப்பன்னிங் எப்படியிருக்கு? - ரஜினியே கேட்ட தகவல்!
[Sunday 2026-11-15 15:00]

நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவின் சீன் திரைப்படத்தின் ஓப்பன்னிங் எப்படி இருக்கிறது என்று விசாரித்துள்ளாராம். அதைப்பற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். ரஜினிகாந்த் இன்றும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஆக இருந்து வருபவர். இவருக்கு என உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெய்லர் 2 படம் உலகம் முழுவதும் ரூ. 830 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது.



டேர் டெவில் திரைப்படத்தில் இணையும் கன்னட சூப்பர்ஸ்டார்!
[Saturday 2026-11-14 16:00]

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டேர் டெவில். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், இப்படத்தில் கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.



1000 கோடியை தொட்ட ஜெயிலர் 2!
[Saturday 2026-11-14 16:00]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் அந்த விஷயம் நடக்கவில்லை. இந்நிலையில், ரூ. 1000 கோடியை ஜெயிலர் 2 தொட்டிருப்பதாக சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா