Untitled Document
November 2, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நடிப்பை தாண்டி ரூ. 120 கோடி வருவாய் ஈட்டிய சமந்தா!
[Sunday 2026-11-01 18:00]

நடிகை சமந்தா தனது Secret Alchemist தொழில் நிறுவனம் மூலம் ரூ. 120 கோடி வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது கர்ப்பகால அனுபவம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை சமந்தா நடிப்பை தாண்டி Saaki, Tralala Moving Pictures போன்ற நிறுவனங்களை நடத்தி தொழிலதிபராகவும் வலம் வருகிறார். இதில் Secret Alchemist எனும் வாசனை திரவிய நிறுவனத்தில் இவர் இணை நிறுவனராக உள்ளார்.

அழகு மற்றும் நறுமண பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்த சமந்தா 2 ஆண்டுகள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான நறுமண பொருட்களை உருவாக்கும் நோக்கில் அங்கிதா ததானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோருடன் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிலையில், இந்த நிறுவனம் தொடங்கிய 8 மாதங்களிலேயே ரூ. 120 கோடி வருவாய் ஈட்டியுள்ளாராம் நடிகை சமந்தா. சினிமாவை தாண்டி தொழிலதிபராகவும் சமந்தா படைத்துள்ள இந்த சாதனை மிகப்பெரிய விஷயம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை!
[Monday 2026-11-02 16:00]

கடந்த 2025ம் வருடம் அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வசூல் வேட்டை செய்தது. இப்படத்திற்கு பிறகு அஜித் எந்த படத்திலும் கமிட்டாகாமல் கார் ரேஸில் முழு கவனத்தையும் காட்டி வந்தார்.



காதல் தோல்வி சர்ச்சை: மனம் திறந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்!
[Monday 2026-11-02 16:00]

நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் "நான் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து வந்துவிட்டேன்" என மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறிய விஷயம் என்ன என்பதை விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இதன்பின் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், கொடி, தள்ளிப்போகாதே, சைரன், டிராகன், பைசன் மற்றும் லாக்டவுன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.



அரசியல் என்ட்ரி குறித்து பேசப்போகும் தனுஷ்?
[Monday 2026-11-02 07:00]

நடிகர் தனுஷ் தற்போது அரசியல் என்ட்ரிக்கான முதற்கட்ட பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் தனது ரசிகைகளை சந்திக்க பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அதில் பங்கேற்ற எல்லா பெண்களுக்கும் வெள்ளி விளக்கு ஒன்றை கிப்ட் ஆக கொடுத்து இருந்தார். அதற்காக தனுஷ் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்ததாக சொல்லப்பட்டது.



ரசிகர்களை பார்க்க கண்ணாடி பெட்டி உடன் வந்த அமிதாப் பச்சன்!
[Monday 2026-11-02 07:00]

சமீபத்தில் பாலிவுட் நடிகர் டைகர் ஷராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் நடிகர் சைப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் முன்னணி நடிகர்கள் பலருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.



நார்த் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸின் உச்சம் ஜெயிலர் 2!
[Sunday 2026-11-01 18:00]

ஜினி படங்கள் என்றாலே எப்போதும் நார்த் அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அவருடைய சுமார் படங்கள் கூட அங்கு மிக எளிதாக 3 மில்லியன் டாலர் வசூல் செய்துவிடும், அந்த அளவிற்கு அந்த பகுதியில் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார்.



மூக்குத்தி அம்மன் 2 முதல் விமர்சனம்!
[Sunday 2026-11-01 18:00]

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் நிலையில், இப்படத்தை பார்த்த Executive தயாரிப்பாளர் தனது X பக்கத்தில் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, படம் எப்படி இருக்கு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகி இருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், முதல் பாகத்தின் கதைக்கும் இப்படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை என படக்குழுவினர் சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கூறியிருந்தனர்.



ப்ரீ புக்கிங்கிலேயே Half Century அடிக்கப்போகும் ராமாயணா!
[Sunday 2026-11-01 07:00]

பிரபல பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராமாயணா. பிரம்மாண்ட பொருட் செலவில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்க இந்த இதிகாசக் காவியத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் , மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் டிஎன்இஜி நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.



எலிமினேட் ஆன போட்டியாளர்: ஆனால் EFP பாஸ் கொடுத்து காப்பாற்றிய TTF வாசன்!
[Sunday 2026-11-01 07:00]

விறுவிறுப்பின் உச்சமாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் 10. நாளுக்கு நாள் போட்டியாளர்கள் போட்டிகளில் முழு ஈடுபாடுடன் விளையாடி வருகிறார்கள். 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் கௌபாய்ஸ் Vs மாஃபியாஸ் என்ற பெயரில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது, அதில் அக்ஷிதா வாசனை தாக்கிய விவகாரம் பேசப்படுகிறது.



மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட கிங் திரைப்படம்!
[Saturday 2026-10-31 16:00]

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் கிங் திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமம் விற்பனை தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கிங். இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



அனைவரும் எதிர்பார்த்த 'வேட்டுவம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!
[Saturday 2026-10-31 16:00]

வேட்டுவம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் பா. ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்; அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை, தங்களான் உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் 'வேட்டுவம்'.



ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் நடத்தி வரும் வசூல் வேட்டை!
[Saturday 2026-10-31 16:00]

ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.



திருமணத்திற்காக ரூ.450 கோடி படத்தில் இருந்து விலகிய அனிருத்!
[Saturday 2026-10-31 05:00]

தற்போது டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் அனிருத். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் அவர் பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைக்கிறார். சன் டிவி குடும்பத்தின் வாரிசான காவ்யா மாறனை அனிருத் காதல் திருமணம் செய்கிறார். வெளிநாட்டில் விரைவில் அவரது திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.



வைரலாகும் AI வீடியோக்கள் பற்றி ஆனந்த்ராஜ் வைத்த வேண்டுகோள்!
[Saturday 2026-10-31 05:00]

ஏஐ எனப்படும் Artificial intelligence தளங்கள் பிரபலமான பிறகு சமூக வலைத்தளங்களில் அதன் மூலம் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோகள் தான் ஆதிக்கம் வைரல் ஆகி வருகின்றன. இணையத்தில் நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகிறது. பல நடிகைகளின் போட்டோக்கள் ஏஐ மூலம் மாற்றப்பட்டு வைரல் ஆவது பற்றி அடிக்கடி சர்ச்சை எழுகிறது. பல நடிகைகளும் இதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



சீரியல், திரைப்படங்கள் என நடித்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!
[Friday 2026-10-30 16:00]

வத்சலா ராஜகோபால், 1979 முதல் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 450 மேற்பட்ட நாடகங்களில் நடித்தவர் தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றியடைந்த ரோஜா, சதி லீலாவதி, செல்வா, காலமெல்லாம் காதல் வாழ்க, ரிதம் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.



ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 15 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Friday 2026-10-30 16:00]

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 15 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, ஹ்ரித்திக் ரோஷன் என பலரும் நடித்துள்ளனர்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா