Untitled Document
October 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
டாக்ஸிக்: திரை விமர்சனம்!
[Wednesday 2026-08-26 16:00]

இந்திய அளவில் டாப் ஸ்டாராக மாறியிருக்கும் யஷ் மற்றும் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி ஆகியோர் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம் வாங்க. 1947யில் இந்தியா விடுதலை பெற்றுவிட்டாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. சால்வடார் என்ற நபர் கேங்ஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்க, அவருக்கு துணையாக ராயாவும் (யஷ்), அவரது அக்கா கங்காவும் (நயன்தாரா) உள்ளனர்.

தங்கள் பெற்றோரை கொன்றவனை பழிதீர்க்கும் ராயாவும், கங்காவும் போதைப்பொருள் கடத்தலில் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். மது, பெண்கள் என டாக்ஸிக் ஆக வாழும் ராயா, தனது பாஸ் சால்வடாரின் மகள் ரெபெக்கா (தாரா சுதாரியா) உடன் நெருக்கமாகிறார்.

இந்த விஷயம் சால்வடாருக்கும் தெரிய வந்ததும் ராயாவுக்கும், ரெபெக்காவுக்கும் திருமணம் முடிவாகிறது. அதே சமயம் கோவாவிற்கு சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த வரும் நாடியா உடனும் ராயா நெருக்கம் கொள்கிறார்.

அதன் விளைவாக நாடியா கார்ப்பமாகிறார். இது சால்வடாருக்கு தெரிய வர ராயா, கங்கா உள்ளிட்ட அனைவரின் வாழ்க்கையும் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

மலையாள திரையுலகில் ஹீரோயினாக வலம் வந்து, பின் இயக்குநராக மாறி லையர்'ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ்.

அவரது இயக்கத்தில் யஷ் நடிக்கும் படம் என்பதும், நயன்தாரா மற்றும் கியாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி என முன்னணி நடிகைகளும் இடமபெற்றுள்ளார்கள் என்பதுமே டாக்ஸிக் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை தூண்டியது.

அதிலும் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இப்படத்தை இயக்கியுள்ள கீது மோகன்தாஸ், ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் டிராமாவாக இப்படத்தைக் கொடுத்துள்ளார். முதல் பாதியில் ராயா என்ற கதாபாத்திரம் எந்த அளவிற்கு டாக்ஸிக் ஆனது என்பதையும், என்னவெல்லாம் செய்யும் என்பதையும் இயக்குநர் நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

காதலா? காமமா? என்று தெரியாமலேயே கியாராவுடன் பழகும் ராயா சம்பந்தப்பட்ட காட்சிகளை பல படங்களில் பார்த்திருப்போம். என்றாலும் அந்த கதாபாத்திரங்களும் பேசும் வசனங்கள் காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன. கேங்ஸ்டர் படங்கள் என்றாலே வன்முறை இருக்கும். இதில் அதையெல்லாம் தாண்டிவிட்டார்கள் என்றே கூறலாம்.

குறிப்பாக கே.ஜி.எப் படத்தையே மிஞ்சும் வகையிலான வன்முறைக்காட்சிகள் உள்ளன. அதற்கும் மேல் ஆபாசம் சார்ந்த காட்சிகள் கண்டிப்பாக முகம் சுளிக்க வைக்கின்றன. லாஜிக் மீறல்கள் என்பதும் இல்லாமல் இல்லை. முதல் பாதி சற்று சுவாரஸ்யமாகவே நகர இடைவேளை 'என்ன இப்படியாகிவிட்டது' என்றே கேட்கத் தோன்றும்.

அதன் பின்னரான இரண்டாம் பாதியில் பொறுமையை சோதிப்பது படத்தின் நீளம்தான். முக்கியமான ட்விஸ்ட் வரும் வரை என்னடா நடக்குது இங்க என்றே நம்மை கேட்க வைத்துவிடுகிறார் இயக்குநர். அதனாலேயே ட்விஸ்ட் வெளியானதும் அதனை ஏற்றுகொள்ளக் கொள்ள முடியவில்லை.

சண்டைக்காட்சிகளை சற்று குறைத்து, படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் சொல்ல வந்த விஷயம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு திருப்தி அளித்திருக்கும். நடிகர்களைப் பொறுத்தவரை யஷ் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது ஸ்கிரீன் பிரசென்ஸ் மிரட்டல். நயன்தாராவும், கியாராவும் அசால்ட்டாக தங்களது கேரக்டரை செய்துள்ளனர்.

ருக்மிணிக்கு அவ்வளவு பெரிய ரோல் இல்லை. தாரா மற்றும் ஹுமா குரேஷியின் கதாபாத்திரம் கச்சிதம். டெக்னிக்கலாக படம் மிரட்டலாக பிரம்மாண்டமாக உள்ளது. 1947, 1960களின் காலகட்டத்தில் கோவாவில் இருப்பது போன்ற உணர்வை தந்துள்ளனர் படக்குழுவினர். ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், வசனங்களுக்கும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

க்ளாப்ஸ்

யஷ், நயன்தாரா, கியாரா

வசனங்கள்

சண்டைக்காட்சிகள்

இசை

பல்ப்ஸ்

நீளமான காட்சிகள்

சில லாஜிக் மீறல்கள்

பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி

மொத்தத்தில் இந்த டாக்ஸிக் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் கசப்பான டானிக்.

  
  
   Bookmark and Share Seithy.com



முதல் வார முடிவில் 'ரணபலி' செய்த வசூல்!
[Friday 2026-10-23 16:00]

தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஹிட் நட்சத்திர ஜோடிகளில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா உள்ளார்கள். இவர்கள் கடைசியாக இணைந்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் படத்தில் நடித்தார்கள். அதன்பின் இப்போது இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வாஸ்லோ உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளார்கள்.



வெளிநாட்டில் நடக்கப்போகும் நடிகர் சூர்யாவின் சீன் பட நிகழ்ச்சி!
[Friday 2026-10-23 16:00]

நடிகர் சூர்யா, இந்த வருடம் முழுவதும் செம சந்தோஷமான விஷயங்கள் நடந்துள்ளது. முதலில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடிப்பில் வெளியான கருப்பு படம் மாபெரும் வெற்றி. பட்டிதொட்டி எங்கும் கலக்கிய இப்படம் வசூலிலும் மாஸ் காட்டியது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா, மமிதா பைஜு, ராதிகா நடிக்க விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி இருந்தது.



புதிய அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் ஜேசன் சஞ்சய்!
[Friday 2026-10-23 07:00]

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் நாயகனாக முன்னணியில் இருந்து வந்தவர் நடிகர் விஜய். கடைசியாக இவரது நடிப்பில் ஜனநாயகன் ரிலீஸ் ஆனது, படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து தான் வெளியாகி இருந்தது. தனது 69வது படத்துடன் நடிக்கப்போவதில்லை என முடிவு எடுத்தவர் அரசியலில் என்ட்ரி கொடுத்து அதில் ஜெயித்து இப்போது முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துள்ளார்.



கார் வாங்கியது ஒரு குத்தமா? - விமர்சனங்களுக்கு மமிதா பைஜு பதிலடி!
[Friday 2026-10-23 07:00]

தமிழ், மலையாள என இரண்டு மொழி ரசிகர்களும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மமிதா பைஜு. பிரேமலு, சூப்பர் சரண்யா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்றவர் சமீபத்தில் நிவின் பாலி ஜோடியாக பெத்லஹேம் குடும்ப யூனிட் என்ற படத்தில் நடித்தார். இப்படம் மலையாளத்தில் செம சூப்பர் டூப்பர் ஹிட்டானது.



சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் கதை இதுதானா?
[Thursday 2026-10-22 16:00]

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மலையாளத்தில் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஜீது மாதவன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஆவேசம் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது இல்லை.



'ஜெயிலர் 2-வில் முக்கியமாக காட்சி கட் செய்யப்பட்டுவிட்டது' - ஜாபர்!
[Thursday 2026-10-22 16:00]

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. எங்கு திரும்பினாலும் மக்கள் அலை தான் இந்த படத்திற்கு, இந்நிலையை ஜெயிலர் 2 தற்போது வரை ரூ 580 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.



தேவாவின் ஆஸ்தான பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!
[Thursday 2026-10-22 16:00]

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர் கிருஷ்ணராஜ். இவர் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் ஆஸ்தான பாடகர்களில் ஒருவர். 'பொற்காலம்' திரைப்படத்தில் வந்த உலகளவில் மிகவும் பிரபலமான 'தஞ்சாவூரு மண்ண எடுத்து' பாடலை பாடியது இவர்தான். மேலும், இசையமைப்பாளர் தேவாவின் இசையில் 'நலம் நலமறிய ஆவல்', வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளிரிக்கா', காத்தடிக்குது மற்றும் சூரரை போற்று படத்தில் 'நாலு நிமிஷம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பாடல்களை கிருஷ்ணராஜ் பாடியுள்ளார்.



'திருமணம் செய்ய 100 முறை கெஞ்சினார்' - விஜய் பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
[Thursday 2026-10-22 07:00]

டாப் ஹீரோயின் ஆக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரியில் தான் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது காபி வித் கரண் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கலந்துகொண்டனர்.



ஜெயிலர் 2 ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
[Thursday 2026-10-22 07:00]

ஜெயிலர் 2, நடிகர் ரஜினி நடிக்க பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியான இப்படம் மாஸாக வெளியாகி இருந்தது. ரஜினி படம் என்றால் சும்மாவா, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே திரையரங்கில் ஆஜர் ஆனது, முதல் நாள் முதல் காட்சியே பல பிரபலங்கள் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார்கள். படத்தின் கதை, நெல்சன் இயக்கம், அனிருத் இசை என ஒட்டுமொத்தமாக படத்திற்கு கைகொடுக்க பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தி வருகிறது.



எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர்! Top News
[Wednesday 2026-10-21 16:00]

ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாராவை வைத்து இயக்கி, நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி பேசப்பட்டது. அப்படத்தை தொடர்ந்து கடந்த வருடம் மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வந்தது, ஆனால் இந்த புதிய படத்தை சுந்தர்.சி அவர்கள் இயக்க நயன்தாரா, ரெஜினா என பலர் நடிக்க உருவாவதாக அறிவிக்கப்பட்டது.



முன்பதிவிலேயே பல கோடி வசூலித்த ராமாயணா திரைப்படம்!
[Wednesday 2026-10-21 16:00]

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ள திரைப்படம் ராமாயணா. 2 பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இதேபோல் ராவணன் வேடத்தில் யஷும், லட்சுமணனாக ரவி துபேயும், ஹனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.



வெளிநாட்டில் திடீரென நிறுத்தப்பட்ட ரஜினியின் ஜெயிலர் 2 காட்சிகள்!
[Wednesday 2026-10-21 16:00]

தமிழ் சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் படங்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கும். அப்படி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி வெளியானது நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம். முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் ஜெயிலர் 2 படத்திற்கு பட்டய கிளப்பும் விமர்சனங்கள் வந்துள்ளன.



அனிருத் - காவ்யா திருமணம்: நெருங்கிய உறவினர்கள் ஆகும் ரஜினி - மு.க.ஸ்டாலின்!
[Wednesday 2026-10-21 07:00]

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி நிறுவனத்தின் வாரிசு காவ்யா மாறன் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. கிரீஸ் நாட்டில் திருமணம், அதை தொடர்ந்து சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. அதற்காக முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி உட்பட பல முன்னணி பிரபலங்களுக்கு அழைப்பிதழ்களை சென்று கொடுத்திருக்கிறார் கலாநிதி மாறன்.



அரசியலில் நுழைவதற்கு தனுஷின் அடுத்த ஸ்டெப்!
[Wednesday 2026-10-21 07:00]

நடிகர் விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மேலும் பல நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். தனுஷ், விஷால் தொடங்கி பல முக்கிய நடிகர்களின் பெயர்களும் இதில் அடங்கும். நடிகர் தனுஷ் அவருடைய ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக பெயர் மாற்றி அரசியல் என்ட்ரிக்கான பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்.



வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-10-20 17:00]

வட இந்தியாவில் ஜெயிலர் 2 இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா