Untitled Document
June 16, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மூன்று ஆண்டு சிறை தண்டனை: தப்பிப்பாரா இர்ஃபான்?
[Wednesday 2024-05-22 18:00]

நேற்றிலிருந்து யூடியூபர் இர்ஃபான் விவகாரம் சோசியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரிகிறது. தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என அவர் அறிவித்தது தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம். துபாயில் இந்த பரிசோதனையை செய்த அவர் தனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என ஒரு பார்ட்டி வைத்து பகிரங்கப்படுத்தி இருக்கிறார். இதுதான் தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.

இந்தியாவை பொறுத்த வரையில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில் இர்பான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? அவர் கைது செய்யப்படுவாரா? என பல கேள்விகள் இருக்கிறது.

அதற்கான விளக்கத்தை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இர்ஃபான் இந்த பரிசோதனையை மேற்கொண்டது வெளிநாட்டில் தான்.

அதனால் இந்திய சட்டம் அயல்நாட்டுக்கு பொருந்தாது. ஆனால் இதில் அவர் செய்த மிகப்பெரும் தவறு அதை வெளிப்படையாக அறிவித்தது. ஒரு வேளை இதை அவரும் அவருடைய மனைவியும் ரகசியமாக வைத்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.

மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. தமிழக சுகாதாரத் துறை தான் முன்வந்து நீதிமன்றத்தில் புகார் கொடுக்க முடியும். அதை வைத்து தான் விசாரணை நடத்தப்படும்.

அதற்கு இர்ஃபான் தரப்பிலிருந்து வரும் விளக்கத்தை பொருத்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தெரியவரும். ஆனால் இதில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய முடியும். ஒன்று கருவில் இருக்கும் குழந்தையை பற்றி அறிவித்தது.

மற்றொன்று தன் மனைவியை ஊக்கப்படுத்தி இந்த பரிசோதனைக்கு அழைத்துச் சென்றது. இந்த இரண்டு பிரிவுகளில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் நிச்சயம் மூன்று ஆண்டு காலம் வரை தண்டனை கிடைக்கும்.

அது மட்டும் இன்றி அபராதமும் விதிக்கப்படும். அதன் பேரில் தற்போது தமிழக சுகாதாரத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். அதற்கு இர்ஃபான் தரப்பில் இருந்து வரும் விளக்கத்தை பொருத்து இந்த வழக்கு நகரும் என வழக்கறிஞர் சங்கர் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com



அஜித் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம்!
[Sunday 2024-06-16 08:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்துள்ளார். இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக துவங்கியது.



அமைச்சர்களுக்கு அறிவுரை சொன்ன கவிஞர் வைரமுத்து!
[Saturday 2024-06-15 17:00]

துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்குள்ள கழிவு மேலாண்மை குறித்து வியந்து, அமைச்சர்களுக்கு அறிவுரை ஒன்றை தெரிவித்துள்ளார். உலக அளவில் திடக்கழிவு மேலாண்மை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் டன் கணக்கில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால், குப்பைகளை தரம் பிரித்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அரசுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.



தனுஷ் மீது பாய்ந்த வழக்கு!
[Saturday 2024-06-15 17:00]

பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள். இந்த பழமொழி இப்போது தனுஷ் வீட்டிற்கு சரியாக பொருந்தி விட்டது. தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் இடையே விவாகரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே தனுஷ் ரொம்பவும் சைலன்ட் ஆக தான் இருக்கிறார்.



பிரமாண்டமாக உருவாகும் "புஷ்பா 2"!
[Saturday 2024-06-15 17:00]

அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். இசையமைப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேப்பை பெற்றது. அண்மையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.



படையப்பா ரஜினியுடன் நடிக்க மறுத்த மீனா!
[Saturday 2024-06-15 06:00]

நடிகர் ரஜினி கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் படையப்பா. அதில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பற்றி தற்போதும் மக்கள் பேசுகிறார்கள். அந்த அளவுக்கு அந்த ரோலில் மிரட்டி இருந்தார் ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரி ரோலுக்கு முதலில் மீனாவை தான் நடிக்க கேட்டாராம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் இதுவரை பாசிட்டிவ் ஆக நடித்துவிட்டு திடீரென நெகடிவ் ஆக, அதுவும் ரஜினிக்கு எதிராக நடிக்க முடியுமா என குழப்பத்தில் இருந்தாராம் மீனா.



சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை: கேரள ரசிகர்கள் அதிர்ச்சி!
[Saturday 2024-06-15 06:00]

நடிகை சன்னி லியோன் ஆபாச படங்கள் மூலமாக உலக அளவில் பிரபலம் ஆனவர். அவர் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சி ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு டான்ஸ் ஆடுகிறார். அதன் மூலமாக அவருக்கு பெரிய வருமானமும் கிடைக்கிறது.



விஜயகாந்த் மாதிரி மற்றும் ஒரு இறந்த பிரபலத்தை கௌரவிக்கும் வெங்கட் பிரபு!
[Friday 2024-06-14 18:00]

பொதுவாக வெங்கட் பிரபு படம் சும்மா போற போக்குல ஒரு கதையை எடுக்கலாம் என்று நினைத்து ஜாலியாக எடுக்கக் கூடியவர். ஆனால் எப்படியாவது ஒரு வெற்றியை தொட்டுவிடும். அதுவும் முன்னணி நடிகர்களுக்கு இவருடைய படம் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அஜித்துக்கு மங்காத்தா சிம்புவுக்கு மாநாடு போன்று இரண்டு படங்களையும் பிளாட்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறார்.



சந்தானத்தை விட தெளிவாக சூரி போடும் திட்டம்!
[Friday 2024-06-14 18:00]

சிவகார்த்திகேயனைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட சந்தானம் இன்று இறக்கை உடைந்து தரையில் நடக்க ஆரம்பித்து விட்டார். ஹீயூமர் காமெடியில் பட்டையை கிளப்பி வந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கிய பின் தனியாக படத்தில் காமெடி பண்ணுவதை நிறுத்திவிட்டார்.



"ராட்சசன் 2" திரைப்படத்தின் அப்டேட்!
[Friday 2024-06-14 18:00]

விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணியில் உருவாகி கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன். இதற்கு முன் இந்த கூட்டணியில் வெளிவந்த முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து கொடுத்த திரைப்படம் தான் இது.



நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலக உண்மையான காரணம் எது தெரியுமா?
[Friday 2024-06-14 06:00]

நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. கோலிவுட் டாப் ஹீரோக்களாக வலம் வரும் அவர்கள் தற்போது ஒரு படத்தில் இணைந்து நடித்தால் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என சொல்லவா வேண்டும்.



"எல்லா ஆண்களும் அப்படி இல்லை" - யாரை சொல்கிறார் ராஷ்மிகா?
[Friday 2024-06-14 06:00]

நடிகை ராஷ்மிகா தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக வலம் வர தொடங்கி இருக்கிறார். அவர் நடித்த அனிமல் படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது. அவ்வளவு வசூல் வந்தாலும் அதன் கதை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பெண்களை மோசமாக நடத்தும் வகையில் வந்த காட்சிகளை பற்றி பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.



அரிய வகை கருப்பை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை!
[Thursday 2024-06-13 18:00]

நடிகை அடா சர்மா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி நடியாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கபட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது தான் கொஞ்சம் நலமாக இருக்கிறார்.



ரெண்டு கெட்டான் நிலைமையில் தள்ளாடும் விஜய் சேதுபதி!
[Thursday 2024-06-13 18:00]

ஒரு படம் திரையரங்குகளில் வருகிறது என்றால் நாம் எல்லாம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு எப்படி குதூகலமாக இருக்கிறோமோ அதைவிட ப்ளூ சட்டை மாறன் புது படத்திற்கு விமர்சனம் கொடுக்க முதல் ஆளாக வந்து விடுவார். அதுவும் இவர் கொடுக்கிற விமர்சனம் நிச்சயமாக நல்லவிதமாக இருக்காது. அந்தப் படத்தின் கதையையும், நடித்த ஆர்டிஸ்ட்களையும், எடுத்த இயக்குனர்களையும் வச்சு செய்யும் அளவிற்கு சம்பவத்தை செய்துவிட்டு போய்விடுவார்.



மீசைய முறுக்கு பட நடிகர் வீட்டில் சடலமாக மீட்பு!
[Thursday 2024-06-13 18:00]

தெகிடி, மீசைய முறுக்கு, இரும்புத்திரை, மேயதா மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் குண சித்தர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பிரதீப் விஜயன். சென்னையில் அவரது வீடு இரண்டு நாட்கள் திறக்காமல் இருந்த நிலையில், அவருடைய நண்பர்கள் கோட்டூர்புரம் காவல்துறையை அணுகி பூட்டை உடைத்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் பிரதீப் சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.



பிரேம்ஜியை புறக்கணித்து பிரபல நடிகர் மகன் திருமணத்திற்கு சென்ற இளையராஜா!
[Thursday 2024-06-13 06:00]

நடிகர் பிரேம்ஜியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 45 வயதாகும் பிரேம்ஜிக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் மிக சிம்பிளாக நடந்தது. இந்து என்ற பெண்ணை கரம்பிடித்த பிரேம்ஜிக்கு நடிகர்கள் பலரும் வந்து வாழ்த்து கூறினார்கள். ஆனால் இளையராஜா மட்டும் வரவில்லை.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா