Untitled Document
November 17, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சிக்கன் வாங்கினால் ஒருமுறை மலபார் சிக்கன் பிரியாணி செய்து பாருங்க!
[Monday 2026-11-16 16:00]

கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமான மலபார் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது பலரும் நள்ளிரவு நேரத்திலும் பிரியாணி சாப்பிடுகின்றனர். சிலர் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிரியாணி, பிரச்சனையில் மனம் கஷ்டமாக இருந்தாலும் பிரியாணி சாப்பிட்டு தன்னை மாற்றிக் கொள்கின்றனர். பிரியாணியில் பல வகைகளில் இருக்கின்றது. ஒவ்வொரு ஊரை மையப்படுத்தி பிரலமாகியுள்ள பிரியாணியில் மலபார் பிரியாணி பிரபலமாகி வருகின்றது. கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல இடங்களில் பிரபலமாகிவரும் மலபார் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1 கிலோ

பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 6

தேங்காய் எண்ணெய் - 1 கப்

பிரியாணி இலை - 1

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 5

கிராம்பு - 4

அன்னாசிப்பூ - 1

சோம்பு - 1 ஸ்பூன்

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்

தயிர் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1ஸ்பூன்

சீரகத் தூள் - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

கொத்தமல்லி இலைகள் - ½ கப்

புதினா இலைகள் - ½ கப்

அரிசி சமைக்கத் தேவையானவை

பாசுமதி அரிசி - 500 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

பிரிஞ்சி இலை - 1

பட்டை - 1 துண்டு

ஏலக்காய் - 5

கிராம்பு - 4

அன்னாசிப்பூ - 1

சோம்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

பிரியாணி செய்வதற்கு அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பிரியாணி செய்வதற்கு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும்.

நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக வைக்கவும். அனைத்து மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதக்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதனுடன் சிக்கன், மிளகாய் மற்றும் பிற மசாலா தூள்களையும் சேர்த்து கிளறி, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, சிக்கனை வேக வைக்கவும்.

மசாலாவில் இருக்கும் மீதியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். சிக்கன் வெந்து கொண்டிருக்கும் போது அதே நேரத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் அரிசியை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும்.

இப்பொழுது சிக்கன் வெந்து கொண்டிருக்கும் போது பாதியளவு சாதத்தினை போடவும். அதன் மீது கொத்தமல்லி, புதினா இலைகள், வறுத்த வெங்காயம் சேர்க்கவும்.

பின்பு மீதமுள்ள மசாலாவை பரப்பி, அதன் மீது மீண்டும் பாதி சாதம் கொத்தமல்லி, புதினா இலை, வறுத்த வெங்காயம் சேர்க்கவும்.

இப்பொழுது பாத்திரத்தினை மூடி மிகக் குறைந்த தீயில் 30 நிமிடம் வேக வைத்து, இறக்கினால் மலபார் சிக்கன் பிரியாணி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா